ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்
போன மாசம் முழுக்க ஆபிசுல ஏகப்பட்ட டென்ஷன். திடீர்னு பைப்லைன் இல்லன்னு சொல்றானுவ.. நா ஏதோ கொழால தண்ணி வர்லனு நெனச்சா, இது என்னமோ ப்ராஜக்ட் பைப்லைன்னு புது கதை. பென்ச்னு ஒரு வார்த்தை. நாற்காலி எல்லாம் எதுக்கு மாத்தராங்கனு பாத்தா, இது அந்த பென்ச் இல்லியாம். மார்ஜின் ஹிட்னு இன்னொரு வார்த்தை - எனக்கு தெரிஞ்ச மார்ஜின் எல்லாம் வொயிட் அன்ரூல்ட் பேப்பர் ல ஒரு இன்ச் எடம் விட்டு போடுவோமே, அந்த மார்ஜின் தான்.
இப்டி பல டென்ஷன்க்கு நடுவுல திருப்பதி போணும்னு வீட்ல ப்ளான் போட்டாச்சு. சனிக்கிழமை காலங்கார்த்தால நானு, அம்மா, அப்பா மூணு பேரும் கிளம்பினோம். திருத்தணி பக்கமா கார் போகுது. சுத்தி மலை, செடி, மரம் - ஆஹா அருமை அருமை. அந்த மலை மேல முருகன் கோவில். (மைண்ட் வாய்ஸ்: திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்...) அந்த நேரத்துல எல்லா டென்ஷனும் கறைஞ்சு போச்சு.
அப்போ தான் லைட்டா பல்பு எரியுது... நாம எதுக்கு இவ்ளொ கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கடைசீல அதை நம்பளும் அனுபவிக்காம, என்ன வாழ்க்கைடானு நெனச்சேன். இன்னும் பத்து இருவது வருசத்துல நம்ம எப்டி இருக்கணும்னு அப்டியே கண்ண மூடி யோசிச்சு பாத்தா... (மைண்ட் வாய்ஸ்: காணி நிலம் வேண்டும் பராசக்தி... பத்து பனிரெண்டு தென்னை மரம் பக்கத்திலே வேண்டும்.... ) இந்த முண்டாசு கட்டி மீசை வெச்ச பாரதி அன்னிக்கே பாடிற்காப்ல.... அத என் மைண்ட் வாய்ஸ் வேற டக்குனு புடிச்சி டைமிங்கா அடிக்குது.
இதாங்க என்னோட ப்யுச்சர் ப்ளான். புள்ள குட்டிங்க எல்லாம் அதது சிறகு மொளச்சு பறந்து போனதும், சிட்டி-ய விட்டு ரொம்ப தூரத்துல அதாவது க்ராமமும் இல்லாத, நகரமும் இல்லாத ஒரு எடம். அங்க அழகா ஒரு வீடு. தோட்டம். ஒரு பசு. மாமரம், வாழைமரம். அங்க இருக்கற கொழந்தைங்களுக்கு பாடம் சொல்லி குடுக்கணும். மத்தவங்களுக்கு உதவியா இருக்கோமோ இல்லியோ, உபத்திரவம் குடுக்காம இருக்கணும்.
நமக்கு புடிச்சவங்களோட இருந்து, புடிச்ச வேலைய செஞ்சிகிட்டு, கோவிலுக்கு போனோமா, புருசனுக்கு சமைச்சு போட்டோமானு இருந்துகிட்டு சந்தோசமா இருக்கும் போதே கைலாசமோ வைகுண்டமோ, எங்க அந்த நேரத்துல சீட் காலியா இருக்கோ அங்க போய் சேந்தேன்னு வெய்ங்க, இந்த பூமில மனுசனா பொறந்ததோட பலன் எனக்கு கிடச்சாச்சு. எங்க காலத்துக்கு அப்றம், இருக்கற சொத்து சொகம் எல்லாம், இல்லாதபட்டவங்களுக்கு யாரு ஆத்மார்த்தமா தொண்டு செய்யறாங்களோ, அவங்களுக்கு எழுதி வெக்கணும்.
(மைண்ட் வாய்ஸ்: எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு....)
இந்த நெனப்பு வந்தப்றம் மனசு அப்டியே ஆனந்தமா இருக்கு. பென்ச் ஆவது மார்ஜின் ஆவது.. சர்தான் போங்கடா...
ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்!
என்னை தமிழில் எழுத தூண்டிய தம்பி ப்ரகதீஷ், அண்ணன் ரசனை, மற்றும் பலருக்கு மிக்க நன்றி.

ரொம்ப கரெக்டு. ஒரு மாசத்துக்கு ஒரு தடவையாச்சும் சிட்டிய விட்டு எங்கனா வெளில போயிட்டு வரணும். முக்கியமா இயற்கை சம்பந்தப்பட்ட இடமா இருந்தா நலம். :)
ReplyDelete(மைண்ட் வாய்ஸ்: எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு....) - வாஸ்தவமான உண்மை!
ReplyDeleteRomba nalla iruku ... nan eppavamu solluven... kadasiya ethavathu village konjam sedi , konjam koti ... athu porum...saravam krishnarapam... (en kita tamil font illa so )
ReplyDeleteMonthly once than ammani citeeekku coming :)))
ReplyDelete